கண்ணில் வரும் துளியினை நம்பு!!
இன்று பூத்த பூவை நம்பு!
என்றும் பூக்கும் கனவை நம்பு!!
கொஞ்சி பேசும் கிளியை நம்பு!
கொஞ்ச தூண்டும் மழலை நம்பு!!
கத்தி பேசும் இடியை நம்பு!
கதைகள் பேசும் புல்வெளி நம்பு!!
வளைந்து ஓடும் நதியை நம்பு!
நதியை வளைக்கும் பாறை நம்பு!!
கரையை தொடும் அலையை நம்பு!
அலை கொண்ட நுரையை நம்பு!!
வாலை ஆட்டும் நாயை நம்பு!
பாலை ஊட்டும் பசுவை நம்பு!!
என் மனமே..
இதுவும் நம்பு எதுவும் நம்பு!
இயற்கை சொல்லும் அனைத்தும் நம்பு!!
ஆனால்..
தனக்கென வாழ்ந்து தறி கெட்டு திரிந்து
மாற்றம் ஒன்றே நிலையென கொண்டு
மனிதம் இழந்து மிருகம் பிறந்த
மனிதனை நம்பாதே!