Sunday, November 29, 2015

Birth and death

First prize in "Original Story",
78% in math,
An average engineer was born; 
An extra ordinary writer.was dead.

Pub colors and peer pressure
Four shots of vodka,
An alcoholic was born;
A microbiologist was dead.

Busy lives, 
Blossoming careers,
Two CEOs were born;
A father and mother were dead.

An affected child,
An underdeveloped society,
A bigot was born;
People were dead. 

A moment is born,
A moment is dead,
Don't die before you are born;
Don't last when you are gone!

Tuesday, November 24, 2015

விமானத்தில் விவாதம்!



"முதல் பார்வையில் காதலா?
ஆழம் தெரியாமல் காலா?
தொட்டு பார்த்து தீண்டி உரசி,
கட்டி பிடித்து கைகள் சேர்த்து,
கண்ணும் கண்ணும் கலந்த பின்னுமே,
கண்ணா பின்னா காரணத்தாலே
அல்ப காலத்தில் காலம் ஆகும்
கலியுக காதலில்...
கண்டவுடன் என்னதென்று
கண் கட்டு வித்தைக்கு
காதல் என்று பெயர் இடாதே..".

கார சாரமாய் பேச்சு வாரத்தை செல்ல
அந்தரத்தில் விஞ்ஞானத்தின் குழந்தையில் பறக்க...
ஒலி பெருக்கி சத்தத்தில் நண்பனின் வாதம்
கல்யாண கூட்டத்தில் கேளா நாதம்

தலை திரும்பி பார்த்த விநாடி...

மலைகள் இடித்து சிதறும் சாரல்
மேகம் ஒடித்து மலரும் தூரல்...

போர் முரசு போல் இதய துடிப்பும்  
வால் வீரர் போல மெய் சிலிர்ப்பும்
அணுவின் உட்கரு போல ஓர் அபார சக்தியும்...
பிரபந்த பிறப்பு போல ஓர் பிரம்மாண்ட யுக்தியும்...


மாறி மாறி என்னை தாக்க...

தூரத்தில் அவள்...
விமானத்தின் மகள்...
தேவதைகளின்  துகள்...

தலை திரும்பி நண்பனை பார்த்தேன்...
புதிய காதலின் புண் சிரிப்போடு புணர்ந்தேன்
"வைரமுத்து வரிகளின் வலி உணர்ந்தேன்
காதல் பொய் என்று சொன்னேன்
அவளைக் காணும் வரை."





Tuesday, October 13, 2015

அழியா வழி!

எழுத  நினைத்து தொடங்கினேன்
எங்கு செல்லும் யான் அறியேன்
படித்து பார்த்து உரைத்து  ரசித்தேன்
வடித்து பார்த்து சுவைக்க எண்ணினேன்

எங்கு பிறக்கும் புதிய மொழி?
இது வரை யாரும் கால் பதித்திடா வழி!
கற்றது அனைத்தும்  பிறரிடம் என்றதும்
கருத்துக்கள் யாவையும் சுயம் இழந்திருக்குமோ?

வாழ்வும் கவியும்
வானமும் வையமும்
ஆயிரம் ஆயிரம்
மருவியும் தழுவியம்
நேற்றும் இன்றும் நாளையும்
வருமெனில்
இந்த சொல்லும் இன்றி அமையாது

இன்னுமொரு உலகம் இனி வந்து பிறப்பினும்
மனிதரே மாண்டனர் என்று  செய்தி கேட்பினும்
காற்றலையில் விசைகள் கருத்தை பதிக்கும்
இல்லை என்றபின் பொருள் ஒன்று  மிதக்கும்...


Translation:

I ponder as I start
I have no idea where it leads
Read, Admired, understood and appreciated
Time to write..

When is a new idea born?
Where is a path that no one has taken?
As we continue to learn from others,
Is there anything that is truly our own?

If
Life, poetry
Sky and earth can
Change and Evolve
Again and Again
My words belong as do my thoughts

When there is a new world,
and the last cry of humanity is heard
the winds will carry the sounds and
The ideas would float along..

Saturday, February 28, 2015

மழை...

இரு  உருவங்கள் உரசி,
கரு மேகங்கள் கருவாக்கும் அரிசி,
தனித்தனியே வரும் இப்பிறவி, ஒன்றாக உலா வரும் மருவி..

ஓ மனிதா! மழையில் நனைவதை விட
மழையின் மகத்துவத்தை நினை..
கருத்துக்கள் ஆயிரம் இயற்கையில்
கற்று கொண்டு கடை பிடி இங்கு இருக்கையில்..

Rain-when two forms meet, we have a birth. Single when formed and United till death. Oh humanity! Rain is not here to be wet. It is here to show us the way.  Nature tells you everything. Listen till you last!