Friday, November 14, 2014

Nolan's காதல் கடிதம்

Please try to read the poem first and then read the comments in English to see the references.

கருந்துளைகளில் சிக்கிய ஒளி போல உன்
கரு விழிகளில் மாட்டி கொண்டேனே!
கனவினுள் கனவை போல - நீ அருகில் இல்லா
காலம் மெல்ல செல்ல கண்டேனே!

உனது ஈர்ப்பு அதிகமனதோ?
எனது நேரம் குறைந்து போனதோ?
சற்றே மறந்தேன் உலகத்தை..
இந்த அன்னியம் மிஞ்சிடும் மரணத்தை...

இழந்துவிட்டேன் இரவில் உறக்கத்தை
உந்தன் கனவில் விதைப்பேன் காதல் மயக்கத்தை...
நாம் இருவரயினினும்
ஒன்றாய் பார்ப்போம் உலகத்தை..

இப்படிக்கு,
உனது இரகசிய காவலன்...

Just like light is caught inside a black hole,
I am trapped within your eyeballs...(Interstellar)
Time without you takes as long as the
Time line of a dream inside a dream (Inception)

Has your attraction increased? (Interstellar)
Has it dilated my time frame?
Whenever you are with me,
I have a short term memory (Memento)
which doesn't kill me but makes me strange! (Dark Knight)


I have lost my sleep and (Insomnia)
I am trying to incept my love in your dreams
Although we are separate bodies
We will both half of a full life...together (Prestige)

Yours sincerely,
The silent guardian. 

Sunday, September 21, 2014

தூரத்து சொந்தம்... (ஒரு தாயின் குரல்)

                                             

காலையில் காபி
frappe ஆனது...
விழித்தெழு என்று
skype சொன்னது,,.

கையில் எப்போதும்
apple உள்ளது..
கண்ணில் எப்போதும்
google கண்ணாடி மிதந்து..

ஓட்டத்தை அளந்து
ஓலி ஒன்று எழும்புது
வாட்டத்தைப்  போக்க
whatsapp வந்தது..

மாற்றங்கள் பல..
மாயங்கள் பல...
பெற்றது இவை எனில்
இழந்தது யாவோ?

தூரத்து சொந்தங்கள்
மறைந்தே போனது..
இருக்கும் சொந்தங்களோ தூரமாய்
வாழ்ந்தது...

கல்யாணத்திற்கு அழைப்பு வந்தால்
கடிதாசியிலே மொய்யும் வந்தது..
கண் மூடி உறவினர் மாய்ந்தால்
தொலை பேசியிலே கண்ணீரும் வந்தது..

உன்னை பெற்றவர் நாங்கள் தானே..
உன்னை விற்றவர் என ஆனது என்ன?

திரை கடல் ஓடி திரவியம் தேடியே..
வாழ்க்கை வரை படத்தில் மறைந்தே போனியே..
3 அறை கொண்ட மனை வாங்கவே
மன அறையை பூட்டி வைத்தாயே..

ஆயிரம் முறை கணினியில் பார்த்தாலும்
உன்னை கண்ணால் ரசிப்பிதற்கு ஈடாகுமோ?
வந்து விடு என்னிடம்.. நீ என்னுடன் இருந்தால்
அந்த வானம் வசப்படும்.. நம் வாழ்வு சுகப்படும்.. 

Saturday, May 31, 2014

ஒரு-வரி(ன்) விடை..

பிறப்பு?
அன்பின் பரிசளிப்பு..

இறப்பு?
இயற்கையின் கடன் அடைப்பு..

கல்வி?
முரண்பாடு.. அறியாமையை அறியும் ஆராய்ச்சி..

ஆண்?
இடியை தாங்குபவன்.. மடியை நாடுபவன்...

பெண்?
தன் உலகை சுரூக்கியவள்..உள்ளத்தை பெருக்கியவள்..

காதல்?
இளமையில் "கள்".. முதுமையில் மயில்கல்...

தாய்?
சாதனைகளை பேசும் போதும் சாப்பிட சொல்பவர்..

தந்தை?
உனக்கும் மேலே உன்னை நம்புபவர்..

வெற்றி?
வினை எச்சம்..தொடு வானம்..

தோல்வி?
புவி ஈர்ப்பு.. தொடு பாதம்...

கடவுள்?
விளக்கமில்லா கேள்விகளின் பதில்..

மனிதன்?
தேடி தேடியே தொலைந்து போபவன்..

நிம்மதி?
கள்ளம் இல்ல உள்ளம்..களங்கம் இல்ல எண்ணம்..


Friday, April 18, 2014

வாழ்க்கை

வாழ்க்கை தேர்வில்
விடை தேடும் மனிதா...
முன் போன விடைத்தாளை
முட்டிப் பிடிக்கும் மடையா...
மதிப்பெண்ணால் உயர்வது ஆராய்ச்சி
மதிப்பால் உயர்வது அனுபவம்...

ஒவ்வொரு நாளும் ஆயிரம் சிந்தனை...
உன்னை சுற்றியே சுழலும் வேதனை...
சிரிக்கிறாயோ  நீ? சிலிர்க்கிராயோ  நீ?
வேர்க்கிராயோ நீ? வெறுக்கிறாயோ நீ?

வேலையில் வேளையை மறந்தாய் நீ...
மனிதனை மருந்தாய் மறந்தாய் நீ...
பணம் ஒன்றே இலக்காய் நீ...
பிரிந்த உறவின் பகடைக்  காய் நீ...

இருப்பது அல்ல வாழ்க்கை
சுகிப்பது தான் வாழ்க்கை..
கை இருப்பு அல்ல வாழ்க்கை..
கை கொடுப்பது தான் வாழ்க்கை...
தடுக்கி விடுவதல்ல வாழ்க்கை
தட்டி கொடுப்பது தான் வாழ்க்கை...
இலக்கு அல்ல வாழ்க்கை
நண்பா..
இனிய பயணம் தான் உன் வாழ்க்கை....

Sunday, February 2, 2014

"காலம்..."

பசித்து அழும் சேய்க்கு
பால் கொடுக்கும் தாயே..
தனித்து நிற்கும் எனக்கு
தோள் கொடுக்கும் தமிழே...

பலன் இல்லா கேள்விகள்
பல என்னிடம் உண்டு,
பணிவோடு கேட்பேன்
பதில் சொல்வாயோ இன்று?

கடவுளோ? காதலோ?
வீடோ? நாடோ?
உறவோ? பகையோ?
நீயோ? நானோ?
தேடி தேடி தொலைந்தே போனேன்
தடவி தடவி தடுக்கி விழுந்தேன்..
இவ்வாழ்வின் விதிகள் அறியேன்..
வெற்றியும் அறியேன்..
பாதை அறியேன்..
கீதையும் அறியேன்...

ஏன் இந்த ஆட்டம்
தடங்களுடன் இப்படி ஒரு ஓட்டம்?
கண்டு கொல்லாத அகவையும் இல்லை
கவனிக்க முடியாத முதுமையும் இல்லை..
தெளிந்தவனுக்கு துயர் இல்லை
தெரியாதவனுக்கு புதிர் இல்லை..
விண்டவர் கண்டதில்லை,
கண்டவர் விண்டதில்லையொ?

எண்ணங்களின் காட்டில்
என்னை நான் தொலைக்க
குழப்பங்களின் ராஜ்யத்தில்
குடும்பம் நடத்த..

தூரத்தில் உன் பதில்
காதோரத்தில் ஒலித்தது..
டிக் டிக் டிக்...