Tuesday, May 17, 2011

என் உயிர் தோழனே...

"
என் உயிர் தோழனே,

வர்ணணைக்கு அப்பாற்பட்ட கர்ணணே!

உன்னை பற்றி நான் என்ன பாட?
நானும் நீயே வேறு என்ன கூற?

இது கலங்கம் இல்லா உறவு,
இது கலபடம் இல்லா நிலவு,
இது அழிக்க முடியா கற்பு,
இது அணைக்க முடியா நெருப்பு,

இதில் சதிகளும் இல்லை,
இதில் சாதிகளும் இல்லை,
இதில் விதிகளும் இல்லை,
இதில் வம்புகளும் இல்லை,

உன் இழப்பிலும் செழிப்பிலும்
உன் மனத்திலும் ரனத்திலும்
உன் உயிரிலும் உடலிலும்
ஒன்றென கலந்தேனே!

காமம் என்னடா இன்பம்
நம் கைதட்டல்களே பேரின்பம்!!

கொலையெ செய்தாலும் உன்னிடம் வருவேன் ,
கூட துணை நிற்பாய் என்று கர்வத்தில் சிரிப்பேன்!!

திட்டி திட்டி ஒதுக்குவோர் மத்தியில்
தட்டி தட்டி என்னை செதுக்கியவனே!
நமக்கு எது பிரிவு?
பிரிவும் பரிவு கட்டும்
இந்த இரவும் நம்மை வாழ்த்தி பாடும்!"

-ஆதி

No comments:

Post a Comment