Monday, November 18, 2013

தண்ணீரில் தாமரை இலை...

தனியே ஒரு இரவு ..
தூக்கமோ தூரத்து உறவு..
தவிக்கிறது நெஞ்சம்...
துடிக்கிறது கொஞ்சம்...

வாழ்கை வருகிறது கண் முன்னே..
நேற்று தெரிகிறது அடி பெண்ணே..

மறக்க மனம் மறுக்கிறது..
நினைக்க உலகம் எதிர்க்கிறது...
விட்ட கைகள் தொலைவில் இருக்க..
தொட்ட கைகள் தோற்று அழுகிறது..

சில இன்னாருக்கு இன்னாரென்று
எழுதி வைத்தவன்
பல இன்னாருக்கு இன்னாவே
எழுதி வைத்தானோ?

சேர்ந்து பார்த்த காட்சிகளையும்...
சேர்த்து பார்த்த கனவுகளையும்..
தனித்து படுத்து
நினைத்து பார்க்க...

தரையை தட்டியது தலை...
சட்டென புரிந்தது இந்த வலை..
இது உலக வாழ்விற்கான விலை..
ஆம், தண்ணீரில் தாமரை இலை...

Tuesday, September 24, 2013

அன்று ஓர் இரவு..

படித்தால் வெற்றி.. பணத்தால் வெற்றி..
அழகால் வெற்றி.. புகழால் வெற்றி......

வெற்றியை நோக்கி வெற்றிடம் ஓடி
மாற்றான் சொல்லுக்கு மந்திரம் பாடி
நிலைமையை ஏற்ற நிம்மதி இழந்து
வறுமையை தவிர்க்க தனிமையில் தவழ்ந்து

முளைத்த சிறகு வளரும் முன்னே
வீட்டை விட்டு பறந்த பறவை
திக்கு தெரியாமல் தனித்து நிற்க....

இணைய தலத்தில் எத்தனை முத்தங்கள்
சத்தங்கள் ஆகா காற்றில் பறக்க....

இளமையை என்ற நீண்ட பாதையில்
இடித்து இடித்து இருட்டில் பயணம்..

விடியுமோ இந்த காலை?
வீடு திரும்புமோ இந்த காளை?
தொடருமோ  எனது தொடக்கம்? அல்லது
அறிவேனோ இவ்வாழ்வின் விளக்கம்....