துன்ப பள்ளம் விழ வேண்டாம்!!
காற்று இங்கு நிற்கவில்லை...
கடல் இன்னும் ஓயவில்லை...
தவறினால் தவறி சென்றாயோ?
தவறி சென்று தவறு செய்தாயோ?
பாதைகள் ஆயிரம் எனினும்
கீதை ஒன்று தான்..
"இதுவும் கடந்து போகும்.."
கள்ளோ பாலோ அவன் பார்ப்பான்..
பட்ட கடனை பக்குவமாய் தீர்ப்பான்...
தவறை எண்ணி இறப்பதை விட
தவறை உணர்ந்து இருப்பதே சிறப்பு,
அதுதான் உன் பிறப்பின் பொறுப்பு...
No comments:
Post a Comment