மௌனம்.
பெண்ணே-
நீ பேசிய போது நிறுத்த மனமில்லை,
நீ நிறுத்திய போதோ மனமே என்னிடம் இல்லை!!
பிறப்பு.
பெண்ணே -
உன்னால் நான் தினமும் பிறக்கிறேன்!
அன்பே-
இரவில் உன் நினைவுகள் தன என்னை கொன்றுவிடுகிறதே!!
கண்ட நாள் முதல்..
இது வரை நான் நிற்கிறேன்,
உலகும் சுற்றுகிறது,
என்று நினைத்தேன் -
அது பொய் -
நான் சுற்றுகிறேன் !
உலகம் நிற்கிறது !!
உன்னை கண்ட நாள் முதல்.
குழி..
காதலியே! என்னை காப்பாற்று-
உன் கன்னக்குழியில் தடுக்கி
இதயத்தில் விழுந்துவிட்டேன்!!
காதல் தோல்வி.
நான் காதலில் தோல்வி அடைந்தாலும்
தற்கொலை செய்ய மாட்டேன் - பெண்ணே
நீ சுவாசிக்கும் காற்றை
சுவாசிக்கும் வாய்ப்பை
இழந்திவிடுவேனே !!
சொர்கமே நரகம்..
இறந்தபின் சொர்கமோ நரகமோ
இயற்கையில்..
சொர்கமே நரகமான பின் இறப்பது
காதலில்..
No comments:
Post a Comment