விண்வெளிக்கு கணை போக..
கண் இமைக்கும் வேளையிலே
கண்முன்னே உயிர் போக..
மாற்றத்தின் பிடிப்பிலே
மனிதமே மறந்து போக..
உலகத்தின் இயக்கத்திலே
உண்மை காதல் மாண்டு போக!!
மாற்றமின்றி எதுவும் உண்டோ?
தடுமாற்றமில்ல உறவும் உண்டோ?
என் மாற்றத்தையும் ஏமாற்றத்தையும் மன்னித்து
நிலைமாறா அன்பும் உண்டோ?
விடை இல்லா விடுகதை என்று
விட்டுபோகும் வேளையில்...
துரத்தில் ஓர் குரல் கேட்க..
அதிலில் எந்தன் பதில் கேட்க..
தலையில் தட்டி கொண்டேன்...
வெளியே போ என்று
நீ சொல்லும் போதும்
கண்ணே "பாத்து போ" என்று சொல்லும்
தடை இல்லா வெள்ளம் போல
தாய் அன்பு இருப்பின்
நிலை என்று வேறொன்று எதற்கு?
முடிவில்லா அன்பு தானே தாய் கணக்கு...
P.S : DEDICATED TO MY MOM :)
Meaning : When rockets are being launched in fractions of a second and lives are being spared in the blink of an eye, when humanity is caught on the hands of change, when the rush of the world results in loss of true love, Is there something that is a CERTAINTY? Is there something that has no obstacles? Is there something that can forgive me and love irrespective of how bad I am?
As I give up on the search of the solution, I hear a voice in the distance which answers my question.. I feel stupid.. Even when being chucked out,there is a heart which looks after you, an unconditional love which flows like a rampaging river.. I get my answer. THERE IS ONE CERTAINTY.. ITS MOTHER's LOVE.. IT IS A NEVER ENDING AND EVER LASTING LOVE.
nice da
ReplyDeletethanks machi.
ReplyDelete